இந்தியா

அதிர்ச்சி.. வெட்டுக்கிளிகளால் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும்.. ஏன் தெரியுமா?

Published

on

வட மாநிலங்களில் விளை பயிர்களை அழிக்கத் தொடங்கிய வெட்டுக்கிளிகள், ஒரு நாளைக்கு 150 கிலோ மீட்டர் வரையிலான பயிர்களைச் சேதப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.

தற்போது இந்த வெட்டுக்கிளி கூட்டம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 3 மாதத்தில் இந்த வெட்டுக்கிளிகளின் அளவு 20 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் ஒவ்வொரு நாளும் அதன் இடைகளுக்கு இணையான பயிர்கள் மற்றும் தானியங்களை உண்பவை ஆகும். அதாவது ஒரு வெட்டுக்கிளி 2 கிராம் எடை வரை பயிர்களைச் சாப்பிடும்.

ஒரு சிறிய அளவிலான இந்த வெட்டுக்கிளி கூட்டமானது, ஒரு நாளைக்குக் குறைந்தது 2,500 நபர்களின் உணவுகளைத் தின்னும்.

கொரோனா வைரஸால் உணவில்லாமல் தவிப்பதை விட அதிகளவில் மக்கள் வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்படுவார்கள். உணவில்லாமல் தவிப்பார்கள். மத்திய அரசு கொரோனா வைரஸ் உடன் சேர்த்து இதன் மீதும் தங்களது கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://seithichurul.com/life-style/natural-ways-to-protect-plants-crops-and-grains-from-grasshoppers-locusts-in-tamil/22974/

seithichurul

Trending

Exit mobile version