தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏன் தரம் உயர்த்தப்படவில்லை? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

Published

on

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தின் மூலமாக கல்வியில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பில் மறுமலர்ச்சியும் ஏற்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளிகளின் தரம்

தமிழ்நாட்டில் தொடக்க நிலைப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளாக ஒரு அரசுப் பள்ளி கூட தரம் உயர்த்தப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. நடப்பு ஆண்டிற்கான மானியக் கோரிக்கையிலும் கூட இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளிவராதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

அன்புமணி ராமதாஸ் கேள்வி

100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டால், அதன் பலன்கள் அதோடு நின்று விடாது. தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளிகளை ஈடுசெய்வதற்கு 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அதே எண்ணிக்கையில் தொடக்க நிலைப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக்கப்படும். நிறைவாக, 100 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும். இதன் மூலம் கல்விக் கட்டமைப்பு விரிவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தாமல் இருப்பது ஏன் என ஆளும் திமுக அரசை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி கேட்டுள்ளார். இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு இருந்தால், கடந்த 2 ஆண்டுகளில் பலநூறு புதிய பள்ளிகள் உருவாக்கப்பட்டு இருக்கும். அது கிராமப் புறங்களில் கல்வி வளர வழிவகை செய்திருக்கும். இத்தகைய சிறப்புமிக்கத் திட்டத்தை கைவிட்டு விடக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.‌

seithichurul

Trending

Exit mobile version