சினிமா செய்திகள்

எச்.வினோத்தை வெறுப்பேற்ற அஜித் எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் போனிகபூர்!

Published

on

இயக்குனர் எச் வினோத்தை வெறுப்பேற்ற நடிகர் அஜித் எடுத்த அதிரடி முடிவு தயாரிப்பாளர் போனி கபூரை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த படம் மெட்ரோ படத்தின் காப்பி என்று கூறப்பட்டதால் அஜித் மிகவும் அப்செட் ஆக இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்டதால் அஜித் 61 படத்தில் அஜீத் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை விரைவில் முடித்து விட்டு அஜீத் 62 படத்தில் முழு கவனத்தை செலுத்தி அவர் முடிவு செய்துள்ளாராம். எனவேதான் 62 படத்தின் தகவல் நேற்று கசிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜீத் 62 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது போனிகபூருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஜித் 61 படப்பிடிப்புக்கு முன்பே அஜித் 62 படத்தின் அறிவிப்பு வெளியாக இருப்பது அஜித் 61 படத்தை அஜித்தே இருட்டடிப்பு செய்வது போல் இருப்பதாக போனிகபூர் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

‘அஜித் 62 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்பதும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version