உலகம்

10% கோட்டாவில் என்ன தவறு.. ஏன் இந்த இடஒதுக்கீடு மக்களுக்கு எதிரானது தெரியுமா?

Published

on

டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் இந்தியாவில் பல பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா நேற்று லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இது இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த மசோதா பல வகையான கேள்விகளை, குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. மண்டல் கமிஷன் அளித்த பரிந்துரைக்கு முழுக்க முழுக்க எதிராக இருக்கும் இந்த மசோதா காரணமாக இந்தியாவின் ”சிஸ்டம்” மொத்தமாக சீர்குலைய வாய்ப்புள்ளது.

இந்த இடஒதுக்கீட்டிற்கு சில வரையறைகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் ஒருவருக்கு இருக்க வேண்டும். விவசாய நிலம் 5 ஏக்கருக்கு குறைவாக இருக்க வேண்டும். வீடு இருக்கும் நிலம் 1000 சதுர அடிக்கும் குறைவாக இருக்க வேண்டும். நகரத்தில் 109 அடி நிலத்திற்கும் அதிகமான பகுதியில் வீடு இருக்க கூடாது. கிராமத்தில் 209 அடி நிலத்திற்கும் அதிகமான பகுதியில் வீடு இருக்க கூடாது.

Trending

Exit mobile version