தமிழ்நாடு

கமலின் இந்த பேட்டியால் எத்தனை சர்ச்சை.. காஷ்மீர் குறித்து பகீர் கருத்து!

Published

on

சென்னை: ஜம்மு காஷ்மீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த விழா ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசி உள்ளார். கமல்ஹசானின் இந்த கருத்திற்கு எதிராக பலர் கோபமாக பதில் அளித்துள்ளனர்.

கமல்ஹாசன் தனது பேச்சில், காஷ்மீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அங்குள்ள மக்கள் அவர்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதை ஏன் இன்னும் யாரும் நடத்தாமல் இருக்கிறார்கள். அவர்கள் எதை நினைத்து பயப்படுகிறார்கள்.

அசாத் காஷ்மீரில் (பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்) என்ன நடந்து கொண்டு இருக்கிறது. அங்கு தீவிரவாதிகளை ரயில் நிலையங்களில் ஹீரோக்கள் போல சித்தரிக்கிறார்கள். படங்களை ஒட்டி வைத்து கொண்டாடுகிறார்கள். என்ன முட்டாள்தனம் இது. இது நிறுத்தப்பட வேண்டும்.

இதில் கமல்ஹாசன் சொன்ன இரண்டு விஷயங்கள் பெரிய சர்ச்சை ஆகி இருக்கிறது. காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியது, கமல்ஹாசன் அப்படி சொல்லி இருப்பது பலரை எரிச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் கமல்ஹாசன் என்ற பெயர் இன்று டிவிட்டரில் தேசிய அளவில் பெரிய வைரலானது. பலர் அவருக்கு எதிராக டிவிட் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version