சினிமா செய்திகள்

பொங்கல் ரேஸ் வசூலில் ஜெயிச்சது யார்?

Published

on

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகின.

இரு படங்களும் ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாகவும், பழைய கதை என்பதால் விமர்சகர்களை திருப்தி செய்யவில்லை என்ற கருத்து வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை ரஜினியின் பேட்ட படம் தான் முதல் நாள் வசூலில் மாஸ் காட்டியது. பேட்ட மற்றும் விஸ்வாசம் ஒரே நாளில் வெளியானதால், இரு படங்களும் தலா 450 தியேட்டர்களை ஆக்கிரமிப்பு செய்தன.

இதனல, 2.0 மற்றும் சர்கார் பட வசூலை இரு படங்களாலும் முறியடிக்க முடியவில்லை. ஆனபோதும் சென்னையில், பேட்ட படம் 1.28 கோடியையும் அஜித்தின் விஸ்வாசம் படம் 88 லட்சத்தையும் வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் வென்ற ரஜினியின் பேட்ட ஒட்டுமொத்த தமிழக வசூல் ரேஸில் விஸ்வாசத்திடம் வீழ்ந்தது. தமிழ்நாடு முழுவதும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் 28.37 கோடி வசூலை ஈட்டியது. பேட்ட படம் 25.87 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்தது.

ஆனால், உலகமுழுவதும் தலைவர் ரஜினியின் பேட்ட படம் தான் முதல் நாள் வசூலில் தான் முடிசூடா மன்னன் என நிரூபித்துள்ளது. அஜித்தின் விஸ்வாசம் படம் 44.56 கோடி ரூபாயையும், ரஜினியின் பேட்ட படம் 62.28 கோடியை வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், விஸ்வாசம் படம் பேட்ட படத்தை விட சுமார் என்ற டாக் வந்தவுடன் தமிழகத்தின் பல திரையரங்குகள் விஸ்வாசம் காட்சியை குறைத்துக் கொண்டு பேட்ட படத்திற்கு அதிக காட்சிகளை ஒதுக்கி வருகின்றன. இந்த வார இறுதியில் நிச்சயம் விஸ்வாசம் படத்தை விட பேட்ட படம் வசூலில் சாதனை படைக்கும் என இதன்மூலம் தெரியவருகிறது

seithichurul

Trending

Exit mobile version