சினிமா செய்திகள்

இந்தியன் 2வில் கமலுக்கு பேரனாக நடிக்கப்போவது யார்?

Published

on

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன் உருவான இந்தியன் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் துவங்க பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

ஆனால், அரசியல் பணிக்காக கமல், தமிழகத்தின் சில இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதால்,

இந்தியன் 2 பட வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த படத்தில் கமலுக்கு பேரனாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளது.

முன்னதாக துல்கர் சல்மான், சிம்பு, சித்தார்த் என்று பல பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றது.

தற்போது புதிதாக இந்த பட்டியலில் நடிகர் ஆர்யாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

சமீபத்தில், ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வரும் ஆர்யாவின் வீடியோ ஒன்று வெளியானது. இதனை தொடர்ந்து, இந்தியன் 2வில் நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

முன்னதாக, காப்பான் படத்தில் நடிகர் சூர்யாவுடன் ஆர்யா இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version