உலகம்

கொரோனாவைக் கடுப்படுத்த தடுப்பூசி போட்டால் போதாது?- WHO எச்சரிக்கை

Published

on

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டும் போட்டால் போதாது என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை முற்றிலுமாக அழிக்க முடியுமா என இதுவரையில் சர்வதேச அளவில் யாராலும் உறுதி அளிக்க முடியவில்லை. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் கொரோனா வைரஸை முற்றிலுமாக அழிக்க முடியாது எனத் தெரிகிறது. காலப்போக்கில் நாம் மிகுந்த பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுடன் நடந்துகொள்வதால் கொரோனாவை கடுமையாகக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மக்கள் சில கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அப்படியானால் மட்டுமே கொரோனாவை தள்ளி வைக்கலாம். நாம் எங்கு சென்றாலம் கொரோனா நம்மைச் சுற்றித்தான் இருக்கும். ஆக, முகக்கவசம், சானிட்டைசர் பழக்கங்களைத் தொடர வேண்டும் என்றும் உலக சுகாதார மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version