உலகம்

உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு மீண்டும் எச்சரிக்கை!

Published

on

கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாகப் பொருளாதாரம் சரிகிறதது என்று பல நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தியும், நீக்கியும் வருகின்றனர்.

இப்படி ஊரடங்கை நீக்கும் அரசுகளுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார மையம்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் அவசரக் கால நிபுணர் மைக் ரியான், ஊரடங்கை நீக்கும் போது கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

ஊரடங்கை நீக்கிய காரணத்தால், ஆப்ரிக்கா நாடுகள் மிகப் பெரிய இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் மைக் கூறினார்.

இந்தியாவில் மே 17-ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் மட்டும் சில விலக்குடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

எனவே இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் சமுக இடைவெளியை கடைப்பிடித்து, மாஸ்க், சானடரைசர் போன்றவற்றைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது.

seithichurul

Trending

Exit mobile version