உலகம்

அடுத்த அவதாரம் எடுக்கிறது கொரோனா: WHO எச்சரிக்கையால் உலக நாடுகள் அதிர்ச்சி!

Published

on

கொரோனா வைரஸ் அடுத்த அவதாரம் எடுக்கிறது என்றும் கொரோனா வைரஸ் அச்சம் இன்னும் நீங்கவில்லை என்றும் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்தது என்பதும் இதன் காரணமாக கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் லட்சக்கணக்கானோர் பலியாகினர் என்பதும் உலகின் அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் சீரழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் கடந்த சில மாதங்களாக பரவி வந்த நிலையில் தற்போது தான் தடுப்பூசி போட்டதன் காரணமாக படிப்படியாக அனைத்து நாடுகளிலும் இயல்பு நிலை திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒமிக்ரானால் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் ஒழிந்து விடும் என்றும் ஒரு சில விஞ்ஞானிகள் கூறியதால் பொதுமக்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸின் அடுத்த உருமாற்றம் மிக வேகமாக பரவி வருவதாகவும் உருமாறிய இந்த வைரஸ் அதிக அளவில் உயிரைப் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கொரோனா அச்சம் இன்னும் நீங்கவில்லை என்றும் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version