உலகம்

கொரோனாவை கண்டுபிடிப்பதற்காக சீனா செல்லவிருந்த உலக சுகாதார அமைப்பு மருத்துவர்களுக்கு கொரோனா!

Published

on

கொரோனாவை கண்டுபிடிப்பதற்காக சீனாவின் வூஹான் நகருக்கு செல்லவிருந்த உலக சுகாதார அமைப்பு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா தொற்று உலகுக்கு பரவியது. ஆய்வுக்கூடத்தில் இருந்து வெளிவந்த வெளவ்வாலின் இறகு சாம்பலானது, அருகில் இருந்த இறைச்சிக்கடை இறைச்சிகளின் மேல் விழுந்ததாகவும், இதனால் கொரோனா பரவியதாகவும் பல மாதங்களாக சீன அரசு காரண கதை கட்டி வந்தது.

இதனிடையே சீனாவின் வூஹானுக்குச் சென்று கொரோனா எப்படி பரவியது என்பதைக் கண்டுபிடிக்கும்படி பல நாடுகள், உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தி வந்தன. உலக சுகாதார அமைப்பில் பல நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பல மாதங்களுக்கு பிறகு, நேரடியாக சீனா சென்று கொரோனா பரவிய காரணத்தை கண்டறிவதற்காக உலக சுகாதார அமைப்பு முடிவு செய்தது. அதன்படி, அந்த அமைப்பைச் சேர்ந்த 15 மருத்துவ விஞ்ஞானிகள் ஜனவரி 1 ஆம் தேதி சீனா செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக சிங்கப்பூரில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் யாருக்கும் கொரோனா இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மருத்துவர்கள் சீனா செல்ல ஆயுத்தமாகினர். ஆனால் ஒரிரு நாளில் 15 பேரில் இருவருக்கு மட்டும் கொரோனா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் 2 பேர் மட்டும் சீனா செல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மற்ற 13 மருத்துவ விஞ்ஞானிகள் சீனா இறங்கியதும் மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், 14 நாட்கள் வரையில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் சீன அரசு கெடுபிடி விடுத்துள்ளது.

Trending

Exit mobile version