உலகம்

23 நாடுகளில் பரவிவிட்டது ஒமைக்ரான் வைரஸ்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை!

Published

on

உலகில் உள்ள 23 நாடுகளிலுமே ஒமைக்ரான் வைரஸ் பரவி விட்டது என்பதும் ஒமைக்ரான் வைரஸ் பரவிய நாடுகளும் மற்ற நாடுகளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் 24ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் மிகவும் கொடூரமானது என்பதும் டெல்டா வைரசை விட பலமடங்கு ஆபத்தை உருவாக்கும் என்றும் மனித உயிர்களை மிக எளிதில் பலியாக்கும் தன்மை கொண்டது இந்த ஒமைக்ரான் வைரஸ் என்றும் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய இந்த வைரஸ் அதன் பின் இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து, செக்குடியரசு, ஹாங்காங், போஸ்ட்வானா ஆகிய நாடுகளில் பரவியது என்றும் இதனை அடுத்து அந்த நாடுகளில் இருந்து விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தெரிவித்த கருத்துக்களின்படி தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் வைரஸ் தற்போது 23 நாடுகளுக்கு பரவி விட்டது என்றும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் உலக நாடுகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார மையம் ஒவ்வொரு நாட்டையும் கண்காணித்து வருகிறது என்றும் இந்த வளர்ச்சி வியப்பாக இல்லை என்றும் மற்ற வைரஸ்கள் என்ன செய்யுமோ அதையே தான் இந்த ஒமைக்ரான் வைரஸ் செய்துகொண்டிருக்கிறது என்றும் இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் என்பதால் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒமைக்ரான் வைரசினால் ஏற்படும் நோயின் தீவிரம், தடுப்பூசிகள் ஆகியவை குறித்தும் உலக சுகாதார மையம் ஆய்வு செய்து வருவதாகவும், மருத்துவ ஆலோசனை குழுவின் வல்லுனர்கள் ஒன்று சேர்ந்து ஒமைக்ரான் வளர்ச்சி அதன் வடிவங்கள் குறித்து மதிப்பீடு செய்து அதற்கான மருந்துகளை தயாரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணிகள் வருவதற்கு பிரிட்டன், கனடா, அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version