தமிழ்நாடு

அண்ணாமலை செலவு செய்யுற 8 லட்சத்துக்கு வரி யார் கட்டுறாங்க? காயத்ரி ரகுராம் கிடுக்குப்பிடி கேள்வி!

Published

on

ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் மற்றும் திமுகவின் ஊழல் விவகாரங்கள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கு மாதம் 8 லட்சம் வரை செலவு ஆவதாகவும், அதனை நண்பர்கள் தந்து உதவுவதாகவும் தெரிவித்தார். இதற்கு வரி யார் கட்டுவார்கள் என காயத்ரி ரகுராம் தற்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

#image_title

அண்ணாமலை தனது செய்தியாளர் சந்திப்பின் போது, தான் முதல் தலைமுறை அரசியல்வாதியாக இருப்பதால், கட்சியின் மாநிலத் தலைவராக மாதம் 7- 8 லட்ச ரூபாய் செலவாவதாகவும் அதனை நண்பர்களை வைத்து சமாளித்துவருவதாகவும் தனது 3 பி.ஏ.களின் சம்பளத்தை மூன்று நண்பர்கள் கொடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கான காவல் அதிகரித்த பிறகு, தான் குடியிருந்த வீடு போதவில்லை என பெரிய வீட்டிற்குச் சென்றதாகவும் அதற்கான வாடகையை இன்னொரு நண்பர் தருவதாகவும் தான் பயன்படுத்தும் கார் இன்னொருவருடையது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜகவில் இருந்து அண்ணாமலைக்கு எதிராக குரல் எழுப்பி விலகிய நடிகை காயத்ரி ரகுராம் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, தன்னை கிளீனாக காட்டுக்கொள்ள மொத்தமாக அனைவரையும் மாட்டிவிடுகிறார் அண்ணாமலை. அவருடைய டிரஸ்ட் ஒன்று உள்ளது, அதில் எவ்வளவு பரிவர்த்தனைகள் நடந்துள்ளது, எவ்வளவு அன்பளிப்புகள் வந்துள்ளது என காட்டுங்கள். குடும்பத்தினருடைய சொத்துப்பட்டியலை காட்டுங்கள். சமீப காலங்களில் அவர்கள் எவ்வளவு சம்பாதித்துள்ளார்கள் என நாம் பார்ப்போம்.

நண்பர்கள் உங்களுக்கு கொடுக்கிறார்கள் என்றால் நாம் வரி கட்ட வேண்டும். ரத்த உறவுகள் கொடுத்தால் மட்டுமே வரி செலுத்த தேவையில்லை. நண்பர்கள் கொடுத்தால் வரி கட்ட வேண்டும். நீங்கள் மாதம் 8 லட்சம் ரூபாய் செலவு செய்கிறீர்கள். இதற்கான வரி யார் கட்டுவா என்பது பெரிய கேள்விக்குறி. நீங்கள் எஸ்கேப் ஆகிறீர்கள். நீங்கள் கிளீனாக இல்லை. வாட்ச் பில்லில் கிளீன் இல்லை. நண்பர்கள் ஓசில எல்லாம் தருகிறார்கள், அது நண்பர்களா இல்லை கலெக்‌ஷன் செய்யப்பட்டதா? ஏன் ஆருத்ரா சிறந்த நண்பராக கூட இருக்கலாம் என அண்ணாமலை குறித்து விமர்சித்தார் காயத்ரி ரகுராம்.

seithichurul

Trending

Exit mobile version