உலகம்

இங்கிலாந்தை அடுத்து அமெரிக்க அதிபரும் ஒரு இந்தியரா? விவேக் ராமசாமி குறித்து சில அரிய தகவல்கள்..!

Published

on

இங்கிலாந்து பிரதமராக சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அவர்கள் பதவியேற்ற நிலையில் தற்போது அடுத்த அமெரிக்க அதிபரும் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்கள் இருந்து வரும் நிலையில் அடுத்த அமெரிக்க அதிபராக இந்தியாவை சேர்ந்த விவேக் ராமசாமி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியில் சார்பில் இந்திய அம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழில் அதிபர் விவேக் ராமசாமி போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியும் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறிய போது ’அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட பரிசீலனை செய்து வருவதாகவும், டிரம்ப் போலவே தொழிலதிபராக இருந்து அமெரிக்கா அதிபராக தனது மிகவும் விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 37 வயதாகும் ராமசாமியின் பெற்றோர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை விவேக் அமெரிக்காவில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் ஆகவும், தாயார் கீதா மருத்துவராகவும் பணியாற்றி வருகின்றனர்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்து அதன் பின்னர் தொழிலதிபராக சாதித்து வருகிறார் விவேக் ராமசாமி. கடந்த 2014 ஆம் ஆண்டு மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கிய அவர் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பதும் இவரது சொத்து மதிப்பு சுமார் 4000 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்திய வம்சாவிலே சேர்ந்த நிக்கி ஹாலே என்பவர் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருக்கும் நிலையில் தற்போது விவேக் ராமசாமியும் இணைந்து உள்ள நிலையில் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிடுபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version