சினிமா செய்திகள்

2018ஆம் ஆண்டின் சிறந்த வில்லன் யார்?

Published

on

2018ஆம் ஆண்டில் ஹீரோக்களுக்கு நிகராக பல வில்லன்களும் பேசப்பட்டனர். ஒரு சில ஹீரோக்களும் வில்லன்களாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. பெண்களும் வில்லியாக நடித்து அசத்தினர். அவர்களின் பட்டியலை தற்போது பார்த்து விடுவோமா..

தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் நவரச திலகம் கார்த்திக் அநேகன் படத்திற்கு பிறகு வில்லனாக நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தின் கதைப்படி அவர், போலீஸ் நாயகன் சூர்யா தான் உண்மையான வில்லன்.

இரும்புத்திரை படத்தில் விஷாலின் குருவான அர்ஜுன் டெக் வில்லனாக அவதாரமெடுத்து பலரையும் நடுங்க வைத்தார். ஆதார் கார்டு மற்றும் நமது சிம் கார்டில் இப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமா? நம்முடைய அக்கவுண்டில் இருக்கும் பணத்தை யாராவது திருடிவிடுவார்களா? என அஞ்ச வைத்தார்.

காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் நானா படேகர் நடித்திருந்தார். நடிப்பால் பல இடங்களில் ரஜினிக்கு டஃப் கொடுத்த அவர், மோடியை நினைவுபடுத்தியதாக மீம்களும் பறந்தன.

டிக் டிக் டிக் படத்திக் ஜெயப்பிரகாஷ் வில்லனாக நடித்திருந்தார். ஆனால், அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

அதேபோல் நீண்ட இடைவெளிக்கு பிறகு சீமராஜா படத்தில் வில்லியாக நடித்திருந்த சிம்ரனின் கதாபாத்திரமும் வலுவாக இல்லாததால், பெரியளவில் பேசப்படவில்லை.

சண்டக்கோழி2, சர்கார் என இரண்டு பெரிய படங்களில் வில்லியாக அசத்தினார் வரலட்சுமி சரத்குமார். மேலும், சர்கார் படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி கதாபாத்திரத்தில் நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

யார் என்றே படம் முழுக்க அடையாளம் தெரியாமல் இந்த ஆண்டில் மிரட்டிய வில்லன் என்றால் அது ராட்சசன் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் நடித்த நான் சரவணன் தான்.

நடிப்புக்காக சான்ஸ் தேடி அலையும் ஒருத்தருக்கு ராம்குமார் இப்படியொரு பெரிய ரோலில் தோளில் சுமத்த அவரும், அசால்ட்டாக நடித்து அசத்தினார்.

பாலிவுட்டில் ஹீரோவாக வலம் வரும் அக்‌ஷய் குமார், ஷங்கரின் 2.0 திரைப்படத்தில் வில்லனாக அசத்தினார். பலரும் அவரது கதாபாத்திரத்தின் காரணமாக அவர் வில்லன் இல்லை. அவர்தான் கதையின் ரியல் ஹீரோ என புகழ்ந்தனர்.

இவர்கள் தான் கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க வில்லன்களாக ரசிகர்களை மிரட்டினர்.

seithichurul

Trending

Exit mobile version