தமிழ்நாடு

மத்திய அமைச்சராகும் எல்.முருகன்: தமிழக பாஜக தலைவர் யார்?

Published

on

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தெலுங்கானா மாநில கவர்னராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. அதேபோல் தற்போது தமிழக பாஜக தலைவராக இருந்து வரும் எல் முருகன் அவர்கள் மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் விரைவில் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து ராஜ்யசபா எம்பி ஆகவும் தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக இருக்கும் எல் முருகன் மத்திய அமைச்சராகவுள்ள நிலையில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார் என்பது குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தில் புதிய பாஜக தலைவராக 5 பேரின் பெயர்களை பாஜக தலைமை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன

பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகிய மூன்று பேர்களில் ஒருவர் தமிழக பாஜக தலைவராக வரலாம் என்று கூறப்படுகிறது. மேலும் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரில் ஒருவரும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஐந்து பேருமே பொதுமக்கள் மத்தியில் பிரபலம் என்பதால் ஓட்டு வங்கியை உயர்த்தக் கூடிய அளவிற்கு இருப்பார்கள் என்று கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி மேலும் ஓரிருவர் பாஜக தமிழக பாஜக தலைவருக்காக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த முடிவை பாஜக தலைமை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவியை பெறுபவர்களுக்கு விரைவில் மிகப் பெரிய பதவியை கிடைக்கும் அதிர்ஷ்டம் இருப்பதால் இந்த பதவியை பெற இருக்கும் அடுத்த தலைவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் தமிழக பாஜக நிர்வாகிகள் இடமும் தொண்டர்களிடம் அடுத்த தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்று விரைவில் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version