தமிழ்நாடு

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? மூவரில் ஒருவரை டிக் செய்த ஸ்டாலின்!

Published

on

தமிழகத்தின் டிஜிபியாக இருக்கும் திரிபாதி அவர்களின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதை அடுத்து புதிய டிஜிபி யார் என்ற கேள்வி காவல் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது. சைலேந்திரபாபு கரண் சின்ஹா, சஞ்சய் அரோரா ஆகிய மூவரில் ஒருவர் புதிய டிஜிபியாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதுகுறித்து நேற்று டெல்லியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது என்பதும் இந்த கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் மூவரில் ஒருவரை டிக் செய்திருப்பதாகவும் அவர் தான் டிஜிபி தமிழகத்தில் டிஜிபியாக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல்வர் டிக் அடித்த நபர் சைலேந்திரபாபு என்ற வதந்தி காவல்துறையினர் மத்தியில் பரவி வருகிறது. இருப்பினும் சைலேந்திரபாபு மற்றும் கரண் சின்ஹா ஆகிய இருவருக்கும் இடையே தமிழக டிஜிபியாக வருவதற்கான போட்டி அதிகமாக இருப்பதாகவும் இருவருமே பல உயர் பதவிகளில் இருந்து அதிகாரிகள் என்பதும் பணிமூப்பு கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் சைலேந்திரபாபு, கரண் சின்ஹா ஆகிய இருவருமே தற்போதைய தமிழக அரசுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அதில் சைலேந்திரபாபுவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தின் புதிய டிஜிபி குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

seithichurul

Trending

Exit mobile version