சினிமா செய்திகள்

தெலுங்கு 96 படத்தில் யார் நாயகி?

Published

on

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் சென்ற ஆண்டின் சிறந்த படமாக விளங்கியது.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தில் ராஜு கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார். மேலும், இந்த படத்தை தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்க நடிகர்களிடம் பேச்சுவார்த்தைகள் நடந்தது.

நாயகன் கதாபாத்திரத்திற்கு இறுதியாக சர்வானந்த் தேர்வானார். நாயகியாக த்ரிஷாவையே நடிக்க வைக்க தயாரிப்பு தரப்பு முயற்சி செய்தது.

ஆனால், த்ரிஷாவின் நடிப்பை பெரிதும் பாராட்டிய நடிகை சமந்தா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் தெரிவிக்க த்ரிஷாவா சமந்தாவா என்ற போட்டி நிலவியது.

இந்நிலையில், சமந்தாவின் ஆர்வத்தை அறிந்த த்ரிஷா தெலுங்கில் ரீமேக்காகும் 96 படத்தில் சமந்தாவே நடிக்கட்டும் என விட்டுக் கொடுத்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version