சினிமா

விஜய் தளபதியா?: உதயநிதி ஸ்டாலினின் சுவாரஸ்ய பதில்!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தளபதி ஸ்டாலின் என்று தான் அழைத்து வருகின்றனர். அவர் தலைவர் ஆன பின்னரும் தளபதி என்று தான் திமுகவினர் கூறுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் நடிகர் விஜய் இளைய தளபதி என அழைக்கப்பட்டு வந்தார். ஆனால் தற்போது மெர்சல் படத்திற்கு பின்னர் அவர் தளபதி விஜய் என கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தளபதி யார் விஜய்யா? ஸ்டாலினா என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் தற்போது நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளியாக உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், நான் முதல்வரானால் என பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சமூக வலைதளத்தில், விஜய்யை தளபதி என அழைப்பதை திமுகவினர் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நடிகரும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரிதான்! என்று பதிலளித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version