சினிமா

பிக்பாஸிலிருந்து விலகிய கமல்… அவருக்கு பதில் நிகழ்ச்சியை நடத்தப்போவது அவரா?…

Published

on

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் தயாரித்து நடித்து வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அப்படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்க வேண்டியிருப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

எனவே, அவருக்கு பின் பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஏற்கனவே கமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது, அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தினார். அவரின் அணுகுமுறை பலருக்கும் பிடித்திருந்தது. ஆனால், அவர் ஒரு நாள் மட்டுமே நிகழ்ச்சியை நடத்தினார்.

தற்போது கமல்ஹாசன் பிக்பாஸிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் வருவாரா இல்லை வேறு யாராவது வருவார்களா என்பது தெரியவில்லை. அதிக பட்ச வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்கு இருப்பதாக கருதப்படுகிறது.

எதுவாக இருந்தாலும் இந்த வார இறுதியில் அது யார் என தெரிந்து விடும்.

seithichurul

Trending

Exit mobile version