சினிமா செய்திகள்

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்? வாக்குகள் விபரம்

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார் என்பதும் 18 போட்டியாளர்கள் மற்றும் இரண்டு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 10 பேர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை மறுநாள் வெளியேறும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இதுவரை கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளது என்பதை பார்ப்போம்,

இந்த வாரம் பிரியங்கா, பாவனி, நிரூப், அக்சரா, வருண் மற்றும் சிபி ஆகிய 6 பேர் நாமினேஷனில் உள்ள நிலையில் அக்சரா, நிரூப் மற்றும் வருண் ஆகிய மூவர் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வாக்குகளை பெற்றுள்ளனர். இவர்கள் மூவருக்கும் இடையே குறைந்த அளவில் தான் வாக்குகள் வித்தியாசம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக பிரியங்கா சுமார் 20 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார் என்றும், பாவனி மற்றும் சிபி அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை மறுநாள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர் அக்சரா, நிரூப் மற்றும் வருண் ஆகிய மூவரில் ஒருவராகவோ இருக்கலாம் என்றும் இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற அக்சரா வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version