தமிழ்நாடு
இதுல யாரு தினகரன் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்!
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அமமுக படுதோல்வி அடைந்ததையடுத்து அந்த கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்நிலையில் கட்சியினர் இல்லங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கட்சியை பலப்படுத்த பல்வேறு ஆலோசனைகளையும், திட்டங்களையும் வகுத்து வருகிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இதனையடுத்து தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் சென்றார் தினகரன்.
அப்போது தர்மபுரி மாவட்டச் செயலாளர் டி.கே.ராஜேந்திரன் குடும்பத்தினரை சந்தித்தார் தினகரன். அங்கு டி.கே.ராஜேந்திரன் தனது பேரனுக்கு பெயர்வைக்க வேண்டும் என தினகரனிடம் சொல்ல, அவரோ அந்த குழந்தைக்கு தினகரன் என தனது பெயரையே சூட்டினார். இப்போது சொல்லுங்க இதுல யாரு தினகரன் என்று.