தமிழ்நாடு

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம்: இந்த அட்டைதாரர்களுக்கு கிடையாதா?

Published

on

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அடுத்ததாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை தற்போது நடைபெற்று வருவதாகவும் இது குறித்து அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் பெரியசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த ஆயிரம் ரூபாய் திட்டம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகி உள்ளது. குடும்ப அட்டையில் குடும்ப தலைவியின் பெயர் இருந்தால் மட்டுமே ரூ.1000 கிடைக்கும் என்றும் தகவல்கள் பரவின. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தற்போது PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என 5 வகையான குறியீடுகள் கொண்ட ஸ்மார்ட் கார்டுகள் உள்ளன. PHH அட்டைதார்ர்கள் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், PHH- AAY அட்டைதாரர்கள் 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருட்களையும், NPHH அட்டைதாரர்கள் அரிசி உள்பட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். அதேபோல் NPHH-S அட்டைதாரர்கள் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொள்ளலாம்.  NPHH-NC அட்டைதாரர்கள் எந்த பொருள்களும் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள். ரேஷன் கார்டை ஒரு அடையாள அட்டை, முகவரிச் சான்றிதழாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்த நிலையில் NPHH-S, NPHH-NC அட்டைதாரர்கள் தவிர மற்ற குறியீடு உள்ள அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழக்கப்படும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version