இந்தியா

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு கோவிட்-19!

Published

on

இங்கிலாந்திலிருந்து கடந்த சில நாட்களில் இந்தியா வந்தவர்களில் 20 நபர்களுக்கு இதுவரை 20 நபர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்தை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 தொற்று மறு உருவம் பெற்றுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொவிட்-19 தொற்று விஸ்வரூபம் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

எனவே ஐரோப்பிய நாடுகளில் முழு ஊரடங்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்தியா உட்பட, பெரும்பாலான நாடுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு விமானச் சேவையை நிறுத்தியுள்ளன.

நேற்று இங்கிலாந்திலிருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதியானது. பஞ்சாபில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து திரும்பிய 7 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. பிரிட்டிஷ் குடியுரிமை உள்ள ஒருவர் உட்பட 4 பேருக்கு அகமதாபாத்தில் கோவிட்-19 தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் 6 நபர்களுக்கும் கொல்கத்தாவில் 2 நபர்களுக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இவை புதிய வகை கோவிட்-19 தொற்றா என்ற தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

seithichurul

Trending

Exit mobile version