இந்தியா

இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலம் எது? தமிழ்நாட்டின் நிலை என்ன?

Published

on

இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு அரசு கடன் வாங்கும் அளவை 5.70 லட்சம் கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த கடன் வாங்கும் அளவு மாநிலங்களின் உற்பத்தி எவ்வளவு என்பதை பொறுத்தே அமைகிறது.

2022-2023 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசு 90,116.52 கோடி ரூபாய் வரை கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளதாக, பட்ஜெட் தாக்கல் செய்த போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார்.

எனவே உற்பத்தி அடிப்படையிலும் மொத்தமாகவும் அதிக கடன் பெற்றுள்ள மாநிலங்கள் பட்டியலை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

உற்பத்தி அடிப்படையில் அதிக கடன் வாங்கிய மாநிலம் என பார்த்தால் அருணாச்சல பிரதேசம் முதலிடம் பிடிக்கிறது. மொத்த உற்பத்தியளவில் 57.4 சதவீதம் வரை கடன் பெற்றுள்ளது.

தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர் 56.6 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் 53.3 சதவீதத்துடன் பஞ்சாப் உள்ளது.

இந்த பட்டியலில் 15வது இடம் பிடித்துள்ள தமிழ்நாடு உற்பத்தியளவில் 31.6 சதவீதம் கடன் பெற்றுள்ளது என ஆர்பிஐ தரவுகள் கூறுகின்றன. கடைசி இடத்தில் உள்ள டெல்லி 2.5 சதவீதம் கடன் பெற்றுள்ளது.

தொகை அடிப்படையில் பார்த்தால், இந்தியளவில் அதிக கடன் பெற்ற மாநிலமாக உத்திர பிரதேசம் 6.11 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது.

இரண்டாம் இடத்தில் 5.72 லட்சம் கோடியுடன் மகாராஷ்டிரா உள்ளது. மூன்றாம் இடத்தில் 5.70 லட்சம் கோடி கடன் சுமையுடன் தமிழ்நாடு உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version