தமிழ்நாடு

13 பெரியதா அல்லது 9 பெரியதா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

Published

on

நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் திமுக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிமுக 9 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதில் திமுக பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றாலும் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த வெற்றி நாடு முழுவதும் திரும்பி பார்க்கும் வெற்றியாக அமைந்துள்ளது.

இதனையடுத்து தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் நடத்தி வரும் திமுக நேற்று பொள்ளாச்சியில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தை நடத்தியது. இதில் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் குறித்தும் பேசினார்.

அப்போது, இடைத் தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதால் அதிமுகதான் வெற்றிபெற்றுள்ளது என்று சிலர் கூறுகிறார்கள். 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றிபெற்றது. ஆளுங்கட்சியான அதிமுக 9 இடங்களில் மட்டுமே வென்றது.

இதில் 13 பெரியதா அல்லது 9 பெரியதா? அதிமுகவிடமிருந்த 12 தொகுதிகளை திமுக கைப்பற்றியுள்ளது என்றால் இதில் யாருக்கு வெற்றி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் இப்போது வேண்டுமானால் திமுகவால் ஆட்சியமைக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், விரைவில் திமுக ஆட்சிப் பொறுப்பில் அமரும் என்றார் ஸ்டாலின்.

Trending

Exit mobile version