இந்தியா

30 லோக்சபா இடைத்தேர்தல்.. 6ல் மட்டும் வென்ற பாஜக.. பரிதாப நிலையில் மோடி அலை

Published

on

டெல்லி: கடந்த 4 வருடத்தில் 30 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெறும் 6 இடங்களில் மட்டும் வென்றுள்ளது.

மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்த போது 282 உறுப்பினர்கள் இருந்தார்கள். பாஜக தொடர் தோல்விகளால் பெரும்பான்மையை இழந்து கொண்டே வந்தது.

கடந்த 4 வருடங்களில் நடந்த பல நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் பாஜக வரிசையாக தோல்வி அடைந்துள்ளது.  2014க்கு பின் இந்தியாவில் மொத்தம் 30 லோக் சபா இடைத்தேர்தல் நடந்தது.

இதில் கடைசியாக நடந்த கர்நாடக மாநில 3 லோக் சபா தொகுதி இடைத்தேர்தலையும் சேர்த்து மொத்தமாக 6ல் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது. காங்கிரஸ்  மற்றும் காங்கிரஸ் கூட்டணிதான் 20 தொகுதிகளில் வென்று இருக்கிறது. மற்ற 4 இடங்களில் மாநில கட்சிகள் தனியாக வென்றுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் அந்த கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்து இருக்கிறது.

லோக் சபாவில் மெஜாரிட்டிக்கு 272 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சியின் பலம் 271  இருக்கிறது.  இதனால் தற்போது பாஜக அரசு மைனாரிட்டி அரசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version