தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது எப்போது? அமைச்சர்கள் பதில்!

Published

on

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும், கல்லூரிகள் திறப்பு எப்போது? என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் பேட்டி அளித்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் ஆசிரியர் சங்கமும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

Read More: கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும்.. அமைச்சர் பொன்முடி!

இந்த நிலையில் அண்டை மாநிலங்களான புதுவை மற்றும் தெலுங்கானாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என்றும் கூறினார்.

அதேபோல் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்து மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து கல்லூரிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்து உள்ளார்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. முதல் கட்டமாக பள்ளிகளில் 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் அதேபோல் கல்லூரிகளுக்கும் விரைவில் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version