தமிழ்நாடு

எல்.கே.ஜி முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது? தயாராகும் பெற்றோர்கள்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் கடந்த 3 நாட்களாக 1700 க்கும் குறைவான கொரோனா பாதிப்பில் இருந்து வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 1 முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது என்பதும் 50 சதவீத மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி கிட்டத்தட்ட வெற்றி அடைந்து விட்ட நிலையில் விரைவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மூன்றாவது அலைக்குரிய அறிகுறி இதுவரை ஏற்படவில்லை என்பது குறைந்து கொண்டே வரும் கொரனோ பாதிப்பிலிருந்து தெரிய வருகிறது.

எனவே விரைவில் எல்.கே.ஜி முதல் 8ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version