தமிழ்நாடு

அறிக்கை தாக்கல் செய்வது எப்போது? நீட் தாக்கம் குழு தலைவர் ஏகே ராஜன் தகவல்!

Published

on

தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என திமுக கடந்த சில ஆண்டுகளாக கூறிவரும் நிலையில் தற்போது திமுக ஆட்சிக் கட்டிலில் உள்ளதால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து திமுக அரசு விலக்கு வாங்கி தரும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் காத்திருக்கின்றனர்.

அந்த நம்பிக்கைக்கு உரிய வகையில் திமுக அரசு சமீபத்தில் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஏகே ராஜன் என்பவரின் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு ஒரு மாதத்திற்குள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குழுவும் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்களை சந்தித்து கருத்து கேட்டு வருகிறது என்பதும் இதுவரை மூன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வரும் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டது என்பதும் இந்த வழக்கு தற்போது சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் நீட் தாக்கம் குறித்த அறிக்கையை ஏகே ராஜன் குழு தாக்கல் செய்யுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று பேட்டி அளித்த ஏகே ராஜன் அவர்கள் ’நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு பாதிப்பு தொடர்பான ஆய்வு பணி 90% முடிந்துவிட்டது என்று கூறிய ஏகே ராஜன் அவர்கள் நீட்தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது என்று கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version