தொழில்நுட்பம்

ஜனவரி 1 முதல் WhatsApp இயங்காது..! – முழுசா படிங்க

Published

on

வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி, சில போன்களில் வேலை செய்யாது என்று அறிவித்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்ட போன்களைப் பொறுத்தவரை ‘ஆண்டிராய்டு 4.0.3’ அல்லது அதற்குப் பின்னர் வந்த வெர்ஷன்களில் வாட்ஸ்அப் இயங்கும். அதே நேரத்தில் இதற்கு முன்னர் வந்த மென்பொருள் கொண்ட ஸ்மார்ட் போன்களில், 2021 ஆம் ஆண்டு, ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயல்படாது.

அதேபோல ஐபோன்களைப் பொறுத்தவரையில், iOS 9 அல்லது அதற்குப் பின்னர் வந்த ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் எந்தவித சிக்கலும் இல்லாமல் இயங்கும். அதற்கு முன்னர் வந்த எவற்றிலும் இனி வாட்ஸ்அப் செயல்படாது.

இதன்படி பார்த்தால் HTC Sensation, Google Nexus S, Sony Ericsson Xperia Arc, LG Optimus 2X, Samsung Galaxy S I9000, HTC Desire, Motorola Droid Razr, Samsung Galaxy S2 உள்ளிட்ட போன்களில் புத்தாண்டு முதல் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது.

 

seithichurul

Trending

Exit mobile version