தொழில்நுட்பம்

2021 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாதாம்!

Published

on

வரும் 2021 முதல் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் வெர்ஷன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்று தகவல்கள் வந்துள்ளன.

தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் அடிப்படை செயலியாக வந்துவிட்டன. இந்தியாவில் சுமார் 340 மில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இனி செயல்படாது என்று செய்திகள் வந்துள்ளன. இது குறித்து வெளியான தகவலின்படி, 2020 ஆம் ஆண்டு முதல் ஆண்ட்ராய்டு 4.03 மற்றும் ஐஓஎஸ் 9 ஆகியவற்றுக்கு முந்தைய பதிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.

இருப்பினும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 4.03க்கு அதிகமான வெர்ஷனை தான் கொண்டுள்ளது. ஒருவேளை பயனர்களின் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 4.03க்கு கீழ் இருந்தால் அவற்றை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அல்லது வேறு புதிய ஸ்மார்ட்போனை வாங்கி வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version