தொழில்நுட்பம்

WhatsApp Update: 2021 இல் ஆரம்பமே சூப்பர் அப்டேட்!

Published

on

2021 புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாட்ஸ்அப்பிலும் புத்தம் புதிதாக 3 அப்டேட்டுகள் வரவுள்ளன.

1. தனியுரிமைக் கொள்கை:

வாட்ஸ்அப்பில் தனியுரிமைக் கொள்கை மற்றும் விதிமுறைகள் புதுப்பிக்கப்படுகின்றன. மேலும், வாட்ஸ்அப் பயனர்கள் இந்தத் தனியுரிமை கொள்கையும், விதிமுறைகளையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்காதவர்கள் தங்களுடைய வாட்ஸ்அப் கணக்கை நீக்க வேண்டும்.

2. வாட்ஸ்அப் வெப்பில் ஆடியோ கால், வீடியோ கால்:

வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக ஏங்கி வந்த ஆடியோ, வீடியோவும் வெப்பில் வந்து விட்டது. அதாவது, வாட்ஸ்அப் செயலியில் உள்ளது போல், இனி வாட்ஸ்அப் வெப்பிலும் வீடியோ காலிங், ஆடியோ காலிங் வசதி கொண்டு வரப்படுகின்றன.

3. ஒரே நேரத்தில் பல படங்களை பேஸ்ட் செய்யலாம்:

கேலரி, போட்டோஸில் இருந்து பல தரப்பட்ட படங்களை காப்பி செய்து, எக்ஸ்போர்ட் செய்யலாம், வாட்ஸ்அப் சாட்டில் பேஸ்ட் செய்யலாம். இதுவும் ஒரு நல்ல சூப்பரான அப்டேட் ஆகும்.

Trending

Exit mobile version