தொழில்நுட்பம்

முன்பின் தெரியாத நபர்கள் இதையெல்லாம் பார்க்க முடியாது: வாட்ஸ் அப் புதிய அப்டேட்!

Published

on

வாட்ஸ் அப்பில் உள்ள ப்ரோபைல் போட்டோ மற்றும் இதர விவரங்களை நமக்கு முன்பின் தெரியாதவர்கள் பார்க்க முடியாதபடி சில அப்டேட்களை வாட்ஸ்அப் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாட்ஸ்அப் நிறுவனம் தனது கோடிக்கணக்கான பயனாளிகளுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை செய்து தருகிறது என்பதும் அதனால் வாட்ஸ் அப்பிற்கு நாளுக்கு நாள் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வாட்ஸ்அப் தனது பயனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்யும் வகையிலும் தனி உரிமை பாதுகாப்பு ரீதியாக பல்வேறு அப்டேட்ட்களை செய்து வருகிறது. அதன்படி இனிமேல் வாட்ஸ் அப்பில் நாம் வைத்திருக்கும் ப்ரோபைல் புகைப்படம், ஸ்டேட்டஸ் மற்றும் இதர விவரங்களை நமக்கு முன்பின் தெரியாதவர்கள் பார்க்க முடியாது என்றும் அதற்கான சில அப்டேட்டுகளை வாட்ஸ் அப் செயலியில் செய்திருப்பதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

வாட்ஸ்அப் இன் புதிய வெர்சனை டவுன்லோடு செய்து பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் வாட்ஸ் அப் செயலியில் பயன்படுத்துவோருக்கு மட்டுமின்றி கம்ப்யூட்டரில் வாட்ஸப் பயன்படுத்துபவர்களுக்கும் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய அப்டேட் அமலுக்கு வந்தபின் நீங்கள் கடைசியாக எத்தனை மணிக்கு வாட்ஸ் அப் வந்தீர்கள், உங்களை பற்றிய தகவல்கள், ப்ரொபைல் போட்டோ ஆகியவற்றை உங்கள் காண்டாக்டில் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்றும் முன்பின் தெரியாதவர்கள் பார்க்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அப்டேட் வாட்ஸ்அப் பயனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹேக்கர்கள் உள்பட நமக்கு தெரியாதவர்கள் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பார்க்க முடியாது என்பது வரவேற்புக்குரிய ஒன்று என அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version