தொழில்நுட்பம்

பிப்.8 தான் கடைசி நாளாம்.. வாட்ஸ்அப்பில் அப்படி என்ன தான் பிரச்னை?

Published

on

வாட்ஸ்அப்பில் அதன் கொள்கைகள், விதிகள் மற்றும் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பிப்ரவரி 8 ஆம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பான அனைத்து வாட்ஸ்அப் பயனாளர்களுக்கும் அவர்களுடைய வாட்ஸ்அப் ஸ்கிரீனில் வந்துள்ளது. சிலர் இது என்னவென்று தெரியாமலே ஏற்றுக்கொண்டாலும், பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் வாட்ஸ்அப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள அந்த புதிய கொள்கைகள் தான்.

ஏனெனில், புதிய விதிகளின்படி, இனி வாட்ஸ்அப்பில் நாம் உள்ளீடும் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என ஃபேஸ்புக்கின் பிற நிறுவனங்களுக்கும் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவருக்கு நாம் அனுப்பும் ஹாய் என்ற மெசேஜில் தொடங்கி, அனைத்து தரவுகளும் எடுத்துக்கொள்ள வாட்ஸ்அப்பிற்கு உரிமை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், நமது போனின் மாடல், நமது ஸ்மார்ட்பேனில் உள்ள சிறப்பம்சங்கள், யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறாம், எங்கு இருக்கிறோம் உள்ளிட்ட அனைத்து தரவுகளை எடுத்துக்கொள்ளவும், அதனை ஃபேஸ்புக்கின் மற்ற தயாரிப்புகளுக்கும் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விதிகள், கொள்கைகள், நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள பிப்ரவரி 8 ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவ்வாறு ஏற்றுக்கொள்ளாத பயனர்களுக்கு, பிப்ரவரி 8 ஆம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது என்றும் கெடுவிதிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version