உலகம்

இன்ஸ்டாகிராம் பாணியில் வாட்ஸ்-அப்: ஒருமுறை மட்டுமே புகைப்படங்களை பார்க்க முடியும்!

Published

on

வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் போட்டோக்கள் வீடியோக்களை ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்கும் வகையிலான புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

வாட்ஸ் அப் பயனர்களின் தனி உரிமையை பாதுகாக்கும் வகையில் ’வியூ ஒன்ஸ்’ என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி அனுப்பப்படும் போட்டோக்கள் வீடியோக்களை மற்றொருவர் ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும்.

ஒரு முறை போட்டோவை ஓபன் செய்து பார்த்துவிட்டு குறிப்பிட்ட வெளியே வந்து விட்டால் அந்த புகைப்படம் தானாகவே மறைந்துவிடும். மேலும் அந்த புகைப்படங்களை வேறு ஒருவருக்கு பார்வர்டு செய்யவும் இயலாது எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது இருப்பினும் அந்த புகைப்படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கொள்ள எந்த தடையும் இல்லை என வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் உள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி என்ற வசதியில் பதிவு செய்யப்படும் புகைப்படங்கள் வீடியோக்கள் 24 மணி நேரம் மட்டுமே இருக்கும் என்பதும் அதன் பின்னர் தானாகவே அழிந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இதே வசதியை தான் வாட்ஸ்அப் நிறுவனமும் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்த புதிய வசதிக்கு வாடிக்கையாளர்கள் பெரும் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் என்பதும் தனி உரிமை பாதுகாப்பது மட்டுமின்றி செல்போனில் மெமரியும் அதிகளவில் மிச்சப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version