இந்தியா

இந்தியாவில் ஒரே மாதத்தில் 20 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: என்ன காரணம்?

Published

on

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் மில்லியன் கணக்கான பயனாளர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ்அப் சமூக வலைதளத்திற்கு கோடிக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென இந்தியாவில் ஒரே வாரத்தில் 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டன என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 20 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி வைத்து இருப்பதாக கூறியுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், மே 15 முதல் மே ஜூன் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் பண மோசடி உள்ளிட்ட புகார்கள் வந்ததன் காரணமாக இந்த 20 லட்சம் வாடிக்கையாளர்கள் கணக்குகளை முடக்கி வைத்திருக்க தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஐந்து கோடிக்கும் அதிகமான வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் ஒருசிலர் வாட்ஸ்அப் மூலம் பண மோசடி உள்ளிட்ட முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வெளிவந்துள்ளது என்றும், நூற்றுக்கணக்கான புகார்கள் வந்ததை அடுத்து தங்களிடமுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் 20 லட்சம் கணக்குகளை முடக்கி உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் 80 லட்சம் கணக்குகளை இதே காரணத்திற்காக முடக்கி உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இதேபோன்ற புகார் வரும் கணக்குகளை முடக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் குறித்த புகார்களை பெற இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் சட்டத்தை இயற்றி உள்ள நிலையில் இந்தியாவில் உள்ள 20 லட்சம் வாடிக்கையாளர்கள் கணக்குகள் முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version