இந்தியா

வாட்ஸ் அப்-பில் ஜாயின்-கால் வசதி: ஒரே நேரத்தில் 8 பேர்களுடன் பேசலாம்!

Published

on

சமூகவலைதளங்களில் முன்னணி செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் தனது பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை செய்து தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக வாட்ஸ் அப் மூலம் தொலைபேசி அழைப்பு விடுக்கலாம் என்பதும், வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பலாம் போன்ற வசதிகளை செய்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் குரூப் கால் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் வாட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் எட்டு பேருடன் வீடியோ காலில் பேசலாம்.

கூகுள் மீட் போன்று வசதி செய்யப்பட்டுள்ளதால் பயனாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வசதியின் மூலம் பயனாளி ஒருவர் 8 பேருடன் உரையாடலாம் என்பதும் ஒருவர் நடுவில் வெளியேறினாலும் அவருக்கு பதிலாக வேறொருவரை இணைத்துக் கொள்ளும் வசதியும் இதில் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வசதி மூலம் வாட்ஸ் அப் மூலம் இனி குரூப் கால்கள் அதிகம் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வசதியை பெற வேண்டுமானால் பயனாளர்கள் தங்களது வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் அதன் பிறகு இந்த வசதியை பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் எந்த கட்டணமும் இன்றி இலவசமாக அழைப்பில் பேசலாம் என்பதால் பலர் தற்போது வாட்ஸ்அப் அழைப்பை தான் பயன்படுத்தி வருகின்றனர். இன்டர்நெட் வசதி மட்டும் இருந்தாலே போதும் அழைப்புகளுக்காக தனி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version