உலகம்

வாட்ஸ் அப்-இல் இந்த எமோஜியை அனுப்பினால் ஐந்து ஆண்டுகள் சிறை: அதிர்ச்சி அறிவிப்பு!

Published

on

வாட்ஸ் அப்-இல்சிவப்பு நிறம் இதயம் கொண்ட எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று செய்தி வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப் என்பதும் இந்து வாட்ஸ்அப் மூலம் பல்வேறு வகையான மெசேஜ் கள் பரிமாறப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில் வாட்ஸ் அப்பில் சிவப்புநிற இதயத்தை குறிக்கும் எமோஜியை, சம்பந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் அனுப்பினால் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுடைய அனுமதி இல்லாமல் சிவப்பு நிற எமோஜி அனுப்பியதாக புகார் எழுந்ததால் எமோஜி அனுப்பியவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மட்டுமன்றி ஒரு லட்சம் சவுதி ரியால் அபராதத் தொகையும் கட்ட வேண்டும் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது.

தெரியாமல் அனுப்பி விட்டதாகவும் இந்த விதி தெரியாது என்றும் கூறிய சமாளிக்க முடியாது என்றும் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் கண்டிப்பாக இதனை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version