இந்தியா

7 மணிநேர முடக்கத்திற்கு பின் மீண்டும் இயங்கியது வாட்ஸ் அப்: பயனர்கள் நிம்மதி!

Published

on

நேற்று இரவு முதல் திடீரென வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் முடங்கியதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா உள்பட பல நாடுகளில் நேற்று இரவு முதல் வாட்ஸ்அப் இயங்கவில்லை என்றும் அதனால் தகவல் பரிமாற்றம் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாட்ஸ்அப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கி உள்ளதாகவும் அதை சரி செய்வதற்காக தொழில்நுட்ப பணியாளர்கள் தீவிர முயற்சியில் இருப்பதாகவும், விரைவில் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இதனை அடுத்து உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றத்திற்காக சிக்னல், டெலிகிராம் உள்பட பல சமூக வலைதளங்களை பயனர்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் ஏராளமான பயனர்கள் புதிய கணக்குகளை தொடங்கி தகவல் பரிமாற்றத்தை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 7 மணி நேரத்திற்குப் பின்னர் தற்போது மீண்டும் வாட்ஸப் இயங்கி வருவதாகவும் அதேபோல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் இயங்கி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து தற்போது மீண்டும் சமூக வலை தளங்கள் இயங்கி வருவதால் பயனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version