கிரிக்கெட்

2-3 மாற்றங்கள்.. தூக்கி அடிக்கப்படும் வீரர்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இதுதான் இந்திய அணியா?

Published

on

சென்னை: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை டெஸ்ட் பைனல் ஆட்டம் ஜூன் மாதம் நடக்க உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சமீபத்தில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி வென்றது. இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வென்றது.

மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் கடைசியாக நடந்த போட்டி டிரா ஆனது. இன்னொரு பக்கம் நியூசிலாந்து – இலங்கைக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் கடைசியாக நடந்த போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தது.

இதன் காரணமாக இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனல்ஸ் போட்டிக்கு சென்றுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை டெஸ்ட் பைனல் ஆட்டம் ஜூன் மாதம் நடக்க உள்ளது. இதில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதன்படி இந்திய அணியில் கீப்பர் மற்றும் ஒரு பேட்ஸ்மேன் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்படுவது கடினம். அவரின் உடல்நிலையை பொறுத்து அணியில் எடுக்கலாமா வேண்டாமா என்று முடிவு எடுப்பார்கள்.

அதே சமயம் அவர் இருக்கும் பட்சத்தில் அக்சர் பட்டேலை நீக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவர் நன்றாக ஆடினாலும் போட்டி இங்கிலாந்தில் நடப்பதால் ஹர்திக் பாண்டியா போன்ற பவுன்சர், ஷார்ட் பால் வீச கூடிய பேட்டிங் ஆல் ரவுண்டர் தேவை.

மேலும் கே எஸ் பரத் நீக்கப்பட்டு இஷான் கிஷான் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் இந்திய அணியில் சுப்மான் கில், ரோஹித் சர்மா , புஜாரா, கோலி, ஷ்ரேயாஸ் அல்லது ஹர்திக், அக்சர் பட்டேல், இஷான் கிஷான், ஜடேஜா, அஸ்வின், ஷமி அல்லது பும்ரா, சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version