தமிழ்நாடு

நகைக்கடன் தள்ளுபடியில் திடீர் சிக்கலா? பரபரப்பு தகவல்

Published

on

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன்கள் ரத்து என அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து உடனே அவர்கள் தாங்கள் நகை கடன் வாங்கிய கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று நகைகளை மீட்க கேட்டனர். ஆனால் கூட்டுறவு வங்கிகளில் இது குறித்து எந்த உரிய பதிலும் சொல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தற்போது கடன் வாங்கியவர்களின் பட்டியலை தயார் செய்து வருவதாகவும் ஆனால் அதே நேரத்தில் நகை கடன் தள்ளுபடி செய்து நகைகளைத் திருப்பிக் கொடுக்க வங்கி நிர்வாகம் மறுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது ’நகை கடன்கள் தள்ளுபடி என்ற அறிவிப்பால் வங்கிகளில் நகைக்கடன் வாங்கியவர்கள் உடனடியாக நகைகளை வாங்கிச் சென்றுவிடுவார்கள். ஆனால் கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு உடனடியாக அந்த தொகையை செலுத்தாது. இதனால் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் திருப்பி கேட்டால் கொடுக்க முடியாத சூழல் ஏற்படும்.

எனவே அரசிடமிருந்து பணம் வந்த பின்னரே நகைகள் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி நகைக்கடன்கள் எந்த தேதியில் இருந்து ரத்து செய்யப்படுகிறது என்பது குறித்த தெளிவான தகவலும் இல்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். இதனால் நகைக்கடனில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version