உலகம்

18 வயது இளம்பெண்ணுக்கு பிறந்த நாள் பரிசாக கிடைத்த ரூ.300 கோடி: செம அதிர்ஷ்டம்

Published

on

கனடாவில் முதல் முறையாக லாட்டரி சீட்டு வாங்கிய இளம் பெண் ஒருவருக்கு சுமார் 300 கோடி பரிசு விழுந்துள்ளதாக தகவல் வழியாக உள்ளன.

18 வயது இளம் பெண் ஒருவர் தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடியபோது, அவருக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த அவரது தாத்தா லாட்டரி சீட்டு வாங்க பணம் கொடுத்தார்,. லாட்டரி சீட்டு வாங்குவது என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் இருந்த போது அவருடைய தாத்தா பொழுதுபோக்காக லாட்டரி சீட்டு வாங்கி வரும்படி கூறியுள்ளார். இதனை அடுத்து ஜூலியட் என்ற அந்த இளம் பெண் லாட்டரி கடைக்கு சென்று என்ன லாட்டரி வாங்குவது எப்படி என தெரியாமல் விழித்துள்ளார்.

அப்போது ஏதாவது ஒரு லாட்டரியை தேர்வு செய்யுங்கள் என கடைக்காரர் கூறியதை அடுத்து அவர் கண்ணை மூடிக்கொண்டு ஒரு லாட்டரியை தேர்வு செய்தார். அந்த லாட்டரி சீட்டுக்கு 48 மில்லியன் கனடியன் டாலர் பரிசு விழுந்து உள்ளது .இது தோராயமாக இந்திய மதிப்பில் சுமார் 300 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 7ஆம் தேதி நடந்த குலுக்களில் ஜூலியட் இந்த பரிசை வென்றவுடன் கனடா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தனக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது என்றும் மருத்துவ படிப்பு படித்து வருகிறேன் என்றும் லாட்டரி சீட்டு விழுந்தது என்பதற்காக நான் என் படிப்பை விடமாட்டேன் என்றும் தொடர்ந்து படித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று என்பதே எனது ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் என் அம்மா அப்பா மற்றும் தாத்தாவுடன் உலகம் முழுவதும் சுற்றி பார்க்க விரும்புகிறேன் என்றும் படிப்பு முடித்தவுடன் நாங்கள் உலகில் உள்ள அனைத்து கண்டங்களுக்கும் செல்ல வேண்டும் என்ற ஆசை இருப்பதாக வும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு கிடைத்த பணத்தின் பெரும் பகுதியை தனது அப்பா பெயரில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு தான் பெரிய பணக்காரராக இருந்தாலும் உங்களை பணம் ஒரு மனிதராக பார்க்காது என்றும் நீங்கள் செய்யும் வேலை தான் உங்களுக்கு ஒரு அடையாளம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version