இந்தியா

இந்தியாவில் முதல் ஸ்டெதாஸ்கோப் ஸ்டெர்லைசர்.. நோய் பரவலை தடுக்க Xech நிறுவனத்தின் கண்டுபிடிப்பு

Published

on

இந்தியாவின் வளர்ந்து வரும் நிறுவனமான XECH, இந்தியாவிலேயே முதல்முறையாக புதுவகை XECH STEROSTET எனப்படும் ஸ்டெதாஸ்கோப் தூய்மை படுத்தும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் சிறப்பு UV-C GI தொழில்நுட்பம் ஸ்டெதாஸ்கோப்பில் இருக்கும் அணைத்து அளவிலான டயாபிராம்களையும் 99.9999%. வரை தூய்மைப்படுத்த உதவுகிறது.

தனியார் மருத்துவ கிளினிக்குகள் முதல் மருத்துவமனைகளில் பொது வார்டுகள் வரை எந்தவொரு மருத்துவ சூழலிலும் ஸ்டெதாஸ்கோப் அதிகம் பயன்படுத்தப்படும் கருவியாகும். உலக சுகாதார மையத்தின் சமீபத்திய அறிக்கைகளின் படி, நோசோகோமியல் நோய்த்தொற்றுகள் என அழைக்கப்படும் சுகாதாரம் தொடர்பான தொற்றுநோய்கள் பல நூறு மில்லியன் மக்களை பாதிக்கிறது.

சுகாதார மையங்களில் ஸ்டெதாஸ்கோப்பில் இருக்கும் டயாபிராம்களை சாதாரணமாக சோதனை செய்து பார்த்ததில் இந்த நோசோகோமியல் தொற்றுநோய் கிருமிகளால் அதிகம் மாசடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் H1N1, இன்ஃப்ளூயன்ஸா, கொரோனா வைரஸ், காசநோய் போன்ற நோய்களும் இருக்கலாம். இதனால் மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இருவரும் இந்த நோய்கிருமிகளால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார மையம், மற்றும் அமெரிக்கவின் நோய் கட்டுப்பாடு தடுப்பு மையமும் இரண்டு நோயாளிகளுக்கு இடையே ஒவ்வொரு பரிசோதனைக்கு பிறகும் சுகாதாரம் செய்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. அதில் முக்கியமாக ஸ்டெதாஸ்கோப் முனையை தூய்மைப்படுத்துவதும் அடங்கும். இப்போது ஸ்டெதாஸ்கோப் முனையை சுத்தப்படுத்த கை கழுவும் சானிடைசரை கொண்டு அதிகம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அது உள்ளிருக்கும் கருவியை சேதப்படுத்தி விடுவதால் நிபுணர்களால் இந்த முறை அதிகம் பரிந்துரைக்கப்படுவதில்லை.

What is XECH STEROSTET? india's first stethoscope sterilizer

தேவைகள் தான் கண்டுபிடிப்புகளின் தொடக்கம் என்பதால் இதற்கான வழியை தேடும் முயற்சியில் XECH நிறுவனம் இறங்கியது. இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் இந்த நிறுவனம் XECH STEROSTET எனும் கருவியை கண்டுபிடித்தது. இந்த STEROSTET என்பது ரசாயனங்கள் அல்லது திரவங்களைப் பயன்படுத்தாமல் ஸ்டெதாஸ்கோப் முனையில் இருக்கும் டயாபிராமை திறம்பட சுத்தம் செய்து, மிக முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ உபகரணத்தின் ஆயுளை நீட்டிக்கவும் உதவுகிறது.

உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வரும் இந்த சூழலில் XECH நிறுவனத்தின் இந்த கண்டுபிடிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் இருக்கும் பல பெரிய மருத்துவர்களுடன் இணைந்து பல ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பிறகு Xech நிறுவனம் இந்தியாவின் முதல் ஸ்டெதாஸ்கோப் ஸ்டெர்லைசரான STEROSTET -ஐ உருவாக்கியுள்ளது.

Also Read: ஒரு பாட்டில் சரக்குக்கு சண்டையா..?- பகீர் சிசிடிவி வீடியோ; கோவையில் அதிமுக நிர்வாகியால் சலசலப்பு

ஒரு நோயாளியிடம் இருந்து மற்றொரு நோயாளியை சந்திப்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் 5 நிமிடத்திற்குள் ஸ்டெதாஸ்கோபை சுத்தம் செய்துவிடும். இதற்காக அதிநவீன UV-C GI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பான, மென்மையான, தொந்தரவு இல்லாத மற்றும் விரைவான ஸ்டெதாஸ்கோப் தூய்மைப்படுத்துதலை நிகழ்த்த முடியும்.

இதுகுறித்து கூறியுள்ள XECH நிறுவனர் பிரணய் பஞ்சாபி, இந்தியாவின் சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும் ஆதரிக்கவும் நாங்கள் விரும்புகிறோம், மேலும் ஒவ்வொரு மருத்துவ பயிற்சியாளருக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான பயனுள்ள சாதனங்களை வழங்க விரும்புகிறோம். அதே நேரம் எங்கள் சாதனம் மிகவும் வசதியானதாகவும் பயன்படுத்த எளிதானதாகவும் இருக்க வேண்டும் என்றும் விரும்பினோம் என்றார்.

Xech Sterostet இன் சில முக்கிய அம்சங்கள் இதோ:

Xech SteroStet குறிப்பாக பாதுகாப்பான மற்றும் விரைவான வழியில் பரிசோதனைக்கு பின்பு சுகாதாரத்தை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள UV-C GI தொழில்நுட்பம் ஸ்டெதாஸ்கோப் டயாபிராம்களை பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்ய பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்டெதாஸ்கோப் டயாபிராமின் அளவு அல்லது அது வைக்கப்பட்டுள்ள கோணம் எப்படியானதாக இருந்தாலும் இதில் பொருத்தப்பட்டுள்ள நான்கு மேம்பட்ட சென்சார்களை கொண்டுள்ள குவாட்-சென்ஸ் தொழில்நுட்பம் பாதுகாப்பாக சுத்தம் செய்வதை உறுதிப்படுத்துகிறது.

Xech SteroStet கருவியில் பொருத்தப்பட்டுள்ள லித்தியம் பாலிமர் பேட்டரி மூலம் ஒரு மணிநேரம் சார்ஜ் ஏற்றிவிட்டு ஒவ்வொரு முறைக்கும் ஐந்து நிமிடங்கள் என 100 முறை சுத்தப்படுத்த பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் இந்த கருவி சுவரில் ஓட்டும் வகையிலும், மேசைகளில் வைத்து பயன்படுத்தும் வகையிலும், பைகளில் உடன் எடுத்து செல்லும் வகையிலும் இருப்பதால் எந்த நேரத்திலும் இதை பயன்படுத்த தயாராக உள்ளது இதனுடைய மற்றொரு சிறப்பம்சமாக உள்ளது.

Trending

Exit mobile version