தமிழ்நாடு

பிக்பாஸ் நடத்துறுதல என்ன தப்பு..?- மக்கள் முன்னர் கொதித்த கமல்

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி, பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்னும் முழக்கத்தோடு கமல், பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் சென்ற கமல், அங்கு பொது மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ‘பிக் பாஸ் நடத்துறவனுக்கு அரசியல பற்றி என்னத் தெரியும்னு கேக்குறாங்க. பிக் பாஸ் நடத்துறதுல என்ன தப்புன்னு அவங்கள கேட்கணும். பிக் பாஸ் மூலமா நான் நிறைய பேர சந்தோஷபட்டுத்துறேன்.

அந்த நிகழ்ச்சி மூலமா நிறைய நல்ல கருத்துகள சொல்லிட்டு வரேன். அதுலாம் இவங்களுக்குப் பிடிக்கல போல இருக்கு. தொடர்ச்சியா மக்கள்ட்ட நான், ‘காசு வாங்க கூடாதுன்னு’ சொல்லிட்டு வரேன். இப்டிலாம் சொன்னா நம்ப என்ன பண்றதுனு பதறுறாங்க’ என்றார்.

கமல், தனது பரப்புரைக் கூட்டங்களில் அதிமுகவினரை அதிகம் விமர்சித்து வருகிறார். குறிப்பாக, ‘நான் தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாரிசு. அவரின் ஆட்சியை என்னால்தான் கொடுக்க முடியும். நான்தான் எம்.ஜி.ஆரின் மீட்சி’ என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். இதனால் கமல் மற்றும் அவர் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விமர்சித்திருந்தார்.

 

Trending

Exit mobile version