உலகம்

2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற உலக உணவுத் திட்டம் .. எதற்காக?

Published

on

ஐக்கிய நாடுகள் சபையின் ‘உலக உணவுத் திட்டம்’ பசியைப் போக்க மற்றும் அமைதியை வளர்ப்பதற்காக எடுத்த முயற்சிகள் காரணமாக 2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளது.

1961-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த சுவைட் ஐசனோவர் வைத்த கோரிக்கையின் பெயரில் உலக உணவுத் திட்டத்தை ஐநா தொடங்கியது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு உணவு உதவிகளை வழங்க முடியுமா என்ற பரிசோதனை முயற்சியாக உலக உணவுத் திட்டம் தொடங்கியது. முதன் முதலாக 1962-ம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தின் போது பாதிப்படைந்தவர்களுக்கு உணவுகளை வழங்கியது.

1965-ம் ஆண்டு நிரந்தர அமைப்பாக உருவெடுத்து, உலகின் மிகப் பெரிய மனிதநேய அமைப்பு என்ற பெயரை எடுத்தது.

அவசரக்காலங்களில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், அதிலிருந்து மீள்வதற்கும், மோதல்கள், பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வருபவர்களுக்கும் நிலையான எதிர்காலத்தை அளிப்பதற்கும் உலக உணவுத் திட்டமானது அர்ப்பணிப்பு பணிகளைச் செய்து வருகிறது.

உணவுகளை விநியோகிக்க மற்ற பிற உதவிகளை செய்ய 5,600 டிரக்குகள், 30 கப்பல்கள், 100 விமானங்கள் போன்றவை உலக உணவுத் திட்ட அமைப்பின் கீழ் உள்ளது. அதிகபட்சமாக 82019-ம் ஆண்டு 8 நாடுகளில் 97 கோடி மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் 120 நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ ஊழியர்களை அனுப்பி உலக உணவுத் திட்ட அமைப்பு உதவி செய்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version