தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் அரசின் வரவு, செலவு எவ்வளவு?

Published

on

தமிழக பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது

அதிமுக பாஜக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் மட்டுமே இந்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் மற்றபடி இந்த பட்ஜெட்டில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து பலர் சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படுவதாக இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதால் திமுக தேர்தல் அறிக்கையில் பல விஷயங்களை தற்போது நிறைவேற்றி உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் எழுந்து வருகிறது

இந்த நிலையில் இன்றைய பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் அரசின் வருமானம் மற்றும் செலவுகள் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு.

ஒரு ரூபாயில் அரசின் செலவுகள்:

மானியம் மற்றும் இலவச திட்டங்களுக்கு – 35 காசுகள்
அரசு ஊழியர்களின் சம்பளம் – 19 காசுகள்
அரசு வாங்கிய கடனுக்கான வட்டி – 13 காசுகள்
மூலதன செலவு – 13 காசுகள்
ஓய்வூதியத்திற்கான செலவு – 8 காசுகள்
பொது நிறுவனங்களின் கடன் – 6 காசுகள்
சம்பளம் அல்லா செலவினங்கள் – 4 காசுகள்
அரசு ஊழியர்கள் கடன் முன்பணம் – 2 காசுகள்

ஒரு ரூபாயில் அரசுக்கு வரும் வரவு:

மாநிலத்தில் சொந்த வரி வருவாய் – 39 காசுகள்
பொது நிறுவனங்கள் மூலம் வருவாய் – 36 காசுகள்
மத்திய அரசு மானியம் – 11 காசுகள்
மத்திய அரசு தரும் வரி பங்கு – 8 காசுகள்
வரி அல்லா சொந்த வருவாய் – 4 காசுகள்
மூலதனம் இல்லாத வருமானம் – 2 காசுகள்

Trending

Exit mobile version