சினிமா செய்திகள்

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவுக்கு ஒரு நடிகை தான் காரணமா?

Published

on

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவுக்கு ஒரு நடிகை தான் காரணம் என ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நேற்று தங்களது சமூக வலைதளங்களில் தாங்கள் சுமூகமாக பிரிவதாக அறிவித்து உள்ளனர். இந்த அறிவிப்பு திரை உலகில் இருக்கும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே தனுஷ் ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருப்பதாகவும் இதனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அந்த நடிகை தான் தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் என்று ரசிகர்கள் வதந்தியை கிளப்பி வருகின்றனர்.

இருப்பினும் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு உண்மையான காரணம் என்ன என்பது இருவர் குடும்பத்துக்கும் மட்டுமே தெரிந்த உண்மை என்பதும் அது இன்னும் வெளியே வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு இது தான் காரணம் என ரசிகர்கள் தங்கள் இஷ்டத்திற்கு வதந்தியை பரப்பி வருவது சரியான நிலை அல்ல என்று ரஜினி, தனுஷ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒருவர் மீது வீண் பழி சுமத்த கூடாது என்றும் பிரிவிற்கான காரணத்தை அவர்களே அறிவிக்கும் வரை பொறுமை காப்போம் என்றும் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பிரபல நடிகை ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்வதற்கு தனுஷ் தான் காரணம் என்று ஒரு வதந்தி பரவியது என்பதும், அதேபோல் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவரின் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என்று வதந்தி பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனுஷை விவாகரத்து செய்து இருப்பதற்கு ஒரு நடிகை காரணம் என்ற வதந்தி பரவி வருவது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் சொல்லி கொண்டு திரியும் ஒருசில கூட்டங்களுக்கு இந்த விஷயம் மிகப்பெரிய ஜாக்பாட் என்பதும், இதை வைத்து இன்னும் ஒருசில நாட்கள் அவர்கள் ஓட்டிவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version