கிரிக்கெட்

IPL – இத்தனை கோடி லாபம் பார்க்கிறதா ஸ்டார் ஸ்போர்ட்ஸ்..?

Published

on

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா, இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், விராட் கோலி தலைமை தாங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதின. கடைசிப் பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் பெங்களூர் வெற்றி கண்டது. இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணி வெற்றி வாகை சூடியது. நேற்றைய போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இன்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் களம் காண்கின்றன.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரையும் ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தான் பெற்றுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புச் செய்வதால் பெரும் வருவாய் குறித்தான தகவல்கள் வெளியாகி மளைப்பை ஏற்படுத்தி வருகின்றன.

2018 ஆம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுக்கு ஐபிஎல் தொடரை ஒளிபரப்பு செய்ய ரூபாய் 16,347.5 கோடிக்கு பிசிசியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். போட்டியை ஒளிபரப்புவதன் மூலம் ஸ்டார்ஸ் போர்ட்ஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 3,600 கோடி முதல் 3,800 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அந்த நிறுவனம் போட்டிகளின் இடையில் போடும் விளம்பரங்களுக்கு 10 வினாடிக்கு விளம்பரக் கட்டணமாக 13 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று ஐபிஎல் போட்டிகள் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதன் மூலமாக ஐபிஎல் போட்டிகளை சராசரியாக 50 லட்சம் பேர் பார்க்கின்றனர். அப்போது ஒளிபரப்பு செய்யப்படும் விளம்பரங்களுக்கும் அதிக தொகை வசூலிக்கப்படுகிறது.

 

Trending

Exit mobile version