தமிழ்நாடு

எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிட என்னென்ன தகுதிகள்? எம்.எல்.ஏவுக்கு என்ன அதிகாரம்?

Published

on

ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறையும் எம்எல்ஏக்களை தேர்வு செய்யும் தேர்தல் வரும் என்பதும் எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டு சட்டமன்றத்துக்கு செல்வார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் ஒரு எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட என்னென்ன தகுதிகள் வேண்டும், தேர்வான எம்எல்ஏக்களுக்கு என்னென்ன அதிகாரம் உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. அது குறித்து தற்போது பார்ப்போம்.

ஒரு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட 25 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும். மாநில வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும். மேலும் அரசு ஊழியராக இருக்க கூடாது. முக்கியமாக குற்றம் செய்து தண்டனை பெற்றவராக இருக்க கூடாது.

மேலும் ஒரு எம்எல்ஏவின் வேலை என்பது சட்டமன்றத்தில் இயற்றப்படும் நல்ல சட்டங்களுக்கு ஆதரவளிப்பது, மக்களுக்கு எதிரான சட்டம் இயற்றினால் அதை தடுப்பது மற்றும் மக்களுக்கு தேவையானவற்றை வாதாடி பெறுவது ஆகியவை ஒரு எம்எல்ஏவின் வேலையாகும். மேலும் ஒரு எம்எல்ஏ தான் சபாநாயகர், துணை சபாநாயகர், ஆகியோர்களை தேர்வு செய்வார் என்பதும் ராஜசபா உறுப்பினர்களை தேர்வு செய்வார் என்பதும் குடியரசுத் தலைவரை கூட எம்எல்ஏ தான் தேர்வு செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு தொகுதிக்கும் வருடத்திற்கு 3 கோடி ரூபாய் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படும். அந்த தொகுதியின் மூலம் அவர் தனது தொகுதியில் சாலை வசதி, பாலம், குடிநீர் வசதி உள்பட பல்வேறு வசதிகளை செய்து கொடுப்பார். ஒரு எம்எல்ஏவுக்கு மாதந்தோறும் சம்பளம் ரூபாய் ஒரு லட்சத்து 5 ஆயிரம் தமிழகத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எம்எல்ஏவாக பதவி ஏற்கும் நபர் ஒருவர் இறந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் பணாம் கொடுக்கப்படும் என்பதும் அது மட்டும் இன்றி எம்எல்ஏவின் எம்எல்ஏக்களுக்கு பென்ஷன் 25 ரூபாய் என்பதும் ஒரு எம்எல்ஏ இறந்துவிட்டால் அவரது வாரிசுகளுக்கு ஓய்வூதியம் மட்டும் 12,500 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version